Wednesday, July 21, 2010

நீ இல்லாத இடமேயில்லை......

அழகாய் அடுக்கப்பட்ட 
பைல்களினூடே 
கவர்ந்திழுக்கும் உன் பார்வை பார்த்தும் 
கட்டி இழுத்த காந்தம் போல் ஒட்டி இருந்தோம்  
உன் பார்வையிலிருந்து நானும் 
என் பார்வையிலிருந்து நீயும் 

சில கணங்கள் நம் பார்வை 
சற்றும் விலகாமல் நான் எழுதிய
மெளனமொழிகளுக்கு அர்த்தம் 
கண்டுபிடிக்க மனத்திரையில் 
ஆயிரமாயிரம் அகராதிகளை 
தேடித்தவித்துக்கொண்டிருந்தது 

அடுத்த நொடியில் நீ சிணுங்கியபோது 
பதறிப்போன என் மனம் 
உடைப்பட்ட சில்லுகளாய் 
சிதிலமடைய ஆயத்தமாகியிருந்தது 

உன்னை கைப்பிடியில் அடக்க 
நினைக்கும் என் எண்ண 
வேலிகளுக்கிடையில் 
உன் கயல்விழிப்பார்வைகளும் 
அதனோடு சேர்ந்த இமைகளின் 
ஓட்டங்களும் 


என் வெப்பமான மூச்சு
காற்று தெறித்த வேகங்களில்
உன் நாசிகளின் மேல்பட்டு
நீ துடித்த வேளைகளும்
சிலிர்ப்படைந்து புல்லரித்த
உன் மயிர்ச்சோலைகள்
தவித்த தவிப்புகளும்
என்னை ஈர்த்ததுன் மையல்களில்

இன்னும் விட்டுவைக்கவா 
எண்ணுவேன் உன்னை 
எடுத்தேன் அந்த ஸ்பேரையை 
தெளித்த நொடியில் 
மாண்டுபோனாயே என் அழகிய 
கரப்பான்பூச்சியே!!

















Saturday, June 26, 2010

பிட்டு தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

என் இனிய அன்பு
பிட்டுத்தோழிக்கு...

எட்டு நாளில் சிநேகம்
கலந்துறவாடிய
அறிமுகம் மட்டுமே


அங்கே நீ
இங்கே நான்
நமக்குள் ஏதும் பிணைப்பில்லை
இந்த படிப்பினைத்தவிர

பதினாறு மணி நேர
வகுப்புகளில்
பாடத்தை கவனித்ததைவிட
பாதி தூங்கிவழிந்தும்
மீதி நமக்குள் சிணுங்கிய
கலாய்த்தல்களும்!!

வகுப்புகள் மட்டுமே நம்மை
தோழிகளாக்கி விடவில்லை
எக்ஸாமில் பிட்டும்
பிணைத்துவிட்டது

நாமெழுதிய முதல் தேர்வில்
தயக்கங்களில்லாமலும்
மறைவுகளில்லாமலும்
உன் காகிதத்திரையில்
ஓடிய அத்தனை எழுத்துக்களும்
நம் தலையெழுத்தாய் மாறிய
பெருமை உன்னையே சாரும்

பழகிய காலங்களை விட
நம்மை நாம் நினைத்துக்கொண்ட
நாட்களே அதிகம்

கடந்தநாட்களில் உன்னை நான்
அறியவில்லை
அறிந்த நாள் முதல் உன்னைபிரிய
மனமில்லை தோழியே!

அடுத்து வரவிருக்கும்
தேர்வுகளில்
நீயே எங்கள் பிட்டு
தெய்வமாய் அருள்புரிவாய்!!

நீ காணும் அனைத்து
நாட்களும்
வெற்றிநாட்களாகவும்
எதிர்காலம் உன் வசப்படவும்
என் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் கடவுளின் கருணையால் மகிழ்ச்சியாக வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!