Friday, September 17, 2010

ஓர் இலை!!

எங்கோ விசியெறிந்த
விதைகள் அனாதையாய்
ஆதாரவாய் அள்ளிப்பொழிந்த
மழைத்துளியில்
பிறப்பெடுத்து நெடுமரமாய்
ஓங்கியுயர்ந்த மரந்தனில்
இலை நடத்தும் நாடகங்கள்
பசுமைமாறி பழுங்கதையாகி
மீண்டும் முளைக்கிறது
அடுத்த கிளைநுனியில்...........

விட்டில் பூச்சி!

சூரியன் ஓடி
பனி தொடங்கும் வேளை
சில்லென்ற காற்றோடு
மறைந்துபோகும் புழுக்கங்கள்

சுவாசத்தோடு திடத்தையும்
ஈர்த்துக்கொண்டு
சுயக்கூடுகள் தேடி ஒளியும்
பறவைக்கூட்டங்கள்

சூரியஒளியில் ஆட்டம்போட்டு
சிரித்த பூவிலைக்கொடிகள்
சூழ்ந்துகொண்டு தூங்கும்
அந்திக்காலம்

இருட்டின் கையில்
சிக்கிவிடக்கூடாதென
சாலைவெளிகளில் அலைந்து
திரியும் மக்கள் கூட்டம்

இருட்டும் வேளைக்களுக்காய்
காத்திருந்து மாயவெளிச்சத்திற்காய்
தங்களைமறந்து திசை தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கும் விட்டில்
பூச்சிகள் மாட்டிக்கொண்டன
அவள் பரபரக்கும் கயல்விழிகளில்....