Friday, October 29, 2010

துணிமூட்டை!

ஆளில்லாத கடையில்
வடித்துவைத்த மூடக்குறத்திக்கு
மூக்கில்லாத குறையை
தீர்த்துவைத்தது நேற்றடித்து மீதியாகியிருந்த
நீர்த்த கால்சியம் கார்பனேட்

எத்துணைபேர் கண்பட்டும்
சிலையாய் நின்றிருந்த அவளின்
பார்வையென்னை ஈர்த்தநொடியில்
அவளின் உண்மைநிலையறிந்து
தூக்கியெறியப்பட்டேன் வெறும் குப்பையாய்
இன்று அவள் கல்லானாதால்...

காற்றுபுக நடுங்கும் அந்த பெருங்கடையில்
கடைந்தெடுத்த துணிமூட்டையாய்
கிடக்கிறேனென மூலையில்
அழுதுகொண்டிருந்தது போன
தீபாவளிக்கு வந்திருந்த புத்தாடைகள்!!

கவிதைன்னா இப்படி தான் சம்பந்தமில்லாம எழுதனுமாம்

5 comments:

Rajkumar K said...

nice kavithai

Rajkumar K said...

nice kavithai

சுசி said...

ரொம்ப டச்சிங்கு.

இந்த தீபாவளிக்கு நீங்களும் புது துணி வாங்காதிங்க மக்கள்ஸ் :((

ஆயில்யன் said...

கடைசி வரி டாப்! :)

போளூர் தயாநிதி said...

nalla akkam than parattugal
polurdhayanithi