Monday, August 16, 2010

கட்டிடங்கள்

தொழிலாளியும் முதலாளியும்
கைகோர்த்த உழைப்பினில்
வளர்ந்துவிட்ட கட்டிடம் மட்டும்
கட்டிடமல்ல

அறிவையும் அறிவியலையும்
கடைந்து கூர்மையாய்
திரித்தெடுத்து செங்கல்கற்களையும்
மணலையும் செம்மையாய் கலந்து
செதுக்கிய சிற்பமாய் நிற்க
வேண்டுமே கட்டிடம்

சிலையாய் மட்டுமில்லை
எமது கட்டிடக்கலையின்
சிறப்பு வரலாறாயும் வளர்ந்து
அதிஅறிவியலும் சிதைக்க
முடியாமலும் சிரித்துநிற்க
வேண்டுமே எங்கள் கட்டிடம்

ஆன்றோரெல்லாம்
ஆயகலைகளை அறிந்தரிந்து
கட்டியிருந்தாலும் அவர்கள்
அவையங்களையனைத்தும் சொல்லி
காலங்காலமாய் நிலைத்துநிற்கும்
கட்டிடக்கலை ஒன்றே

படிபடியாய் முன்னேற்றிய கற்களை
மாமலையாய் ஓங்கிநிற்கச் செய்யும்
என் கட்டிடக்கலைஞனுக்கு
பிரம்மனும் ஈடில்லை

வர்ணிக்க வார்த்தைகளின்றி
வானுயரம் மேம்பட
வடிக்கும் எங்கள் கலைஞனின்
அறிவுத்திறனையும் சொக்கவைக்கும்
கட்டிடக்கலையின் கைத்திறம்.